பெட்டாலிங் ஜெயா, மார்ச்.22-
சன்வே குழுமத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவன் தகாத நடடிக்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பான தகவலை அந்த முன்னணி பல்கலைக்கழகம் இன்று உறுதிபடுத்தியது.
சம்பந்தப்பட்ட மாணவனுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை பல்லைக்கழகம் மிகக் கடுமையாகக் கருதுவதாக அது தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
தவிர அந்த மாணவனை அத்தகைய செயலில் ஈடுபட வைத்து, பகடிவதை செய்த மாணவர்களையும் அது கண்டித்துள்ளது.