கோத்தா பாரு, மார்ச்.22-
எந்தவொரு வசதிமிக்க குடும்பப் பின்னணியோ அல்லது தொழில்துறைக்கான நிபுணத்துவமோ கொண்டிருக்காத இளையோர்கள் சிலர், சட்டவிரோத நடவடிக்கையின் வாயிலாக ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொகுசான வாகனங்களைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து – கிளந்தான் எல்லைப் பகுதியில் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளைக் கடத்துவது மூலம் அவர்கள் வசதிமிகுந்த வாழ்க்கையில் உள்ளனர் என்பது போலீஸ் படையின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
வசதிமிகுந்த குடும்ப பின்புலன் இல்லாமலேயே இளையோர்கள் சிலர் முஸ்தாங் மற்றும் பிஎம்டபள்யூ போன்ற விலை உயர்ந்த சொகுசான கார்களின் பவனி வருவது குறித்து ஆராயப்பட்ட போது அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கிளந்தான் – தாய்லாந்து எல்லையில் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.