பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-
மாணவர்களை சமூக வலைதளங்களில் உள்ளடக்கப் பொருளாக மாற்றும் பிரச்சினை இனி எழக்கூடாது. ஏனெனில் அவர்களின் முகங்களை வெளியிட பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையே ஏற்கனவே ஓர் ‘ஒப்பந்தம்’ உள்ளது. கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களின் படங்கள், காணொலிகள், குரல் பதிவுகள் ஆகியன சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுவதை அனுமதிக்கும் ஒப்புதல் கடிதத்தை இது குறிக்கிறது. இதன்வழி, ஆசிரியர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுள்ளனர் என்றார் தேசிய ஆசிரியர் சேவை சங்கமான என்யூடிபியின் தலைவர் அமினுடின் அவாங்.
பெரும்பாலான edufluencers மாணவர்களின் வெற்றிக் கதைகள், கற்பித்தல் நுட்பங்கள் போன்ற நேர்மறையான உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், இது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் கல்விச் சூழலில், edufluencersகளுக்கு இந்த அணுகுமுறை முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார் அமினுடின்.