மின்சாரம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பியது

ஜோகூர் பாரு, மார்ச்.23-

ஜோகூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் முழுமையாக வழக்கு நிலைக்குத் திரும்பியது என தெனாகா நேஷனல் பெர்ஹாட் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணி நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக டிஎன்பி மின்சார விநியோகத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS