ஓப் செலாமாட்: ஏழாயிரம் அதிகாரிகள் பணியாற்றவிருக்கின்றனர்

கோலாலம்பூர், மார்ச்.23-

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் காலத்தில் 24வது ஓப் செலாமாட் சோதனை நடவடிக்கைக்காகச் சாலைப் போக்குவரத்து அமலாக்கத் துறையின் கிட்டத்தட்ட ஏழாயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்தச் சோதனை எதிர்வரும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை நடப்பில் இருக்கும் என புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.

‘Rumah Selamat, Selamat Sampai Ke Destinasi’ என்ற கருப்பொருளைக் கொண்ட ஓப் செலாமாட் சோதனை நடவடிக்கை ஆறு நாட்களுக்கு நடப்பில் இருக்கும். அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள 25 இடங்களும் அடிக்கடி விபத்து நடக்கும் 46 அபாயகரமான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அசாதாரண போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அதனை எளிதாக்கவும் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என முகமட் யுஸ்ரி மேலும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS