கோலாலம்பூர், மார்ச்.23-
இரமலான் மாதங்களில் சந்தைகளிலும் பள்ளிவாசல் வளாகங்களிலும் ‘போலி பிச்சைக்காரர்கள்’ நடமாடுவது அதிகமாக இருப்பதால், அதனைக் கையாள்வது குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகாரிகளுக்கு தேவை என்று பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி ஹாசான் தெரிவித்தார். பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
இரமலான் மாதத்தில் உள்ளூர், வெளிநாட்டுப் ‘போலி பிச்சைக்காரர்கள்’ வருகை திடீரென அதிகரித்துள்ளது. இவர்கள் இரமலான் சந்தைகள், பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற பிரபலமான பகுதிகளில் காணப்படுகிறார்கள். கோத்தா பாருவில் தாய்லாந்திலிருந்து குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிச்சைக்காரர்களை அழைத்து வரும் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட் உள்ளதாக கிளந்தான் அதிகாரிகள் தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.