ஜோகூர் பாரு, மார்ச்.23-
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களின் சாலைகளில் ஏற்பட்ட 800 பள்ளங்களை நாளைக்குள் சரி செய்ய மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜோகூர் பாரு மாவட்டத்தில் சுமார் 500 பள்ளங்கள் இருப்பதாகவும், ஊலாய் பொந்தியான், கோத்தா திங்கி, குளுவாங் ஆகிய மாவட்டங்களில் மேலும் 300 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பாஃஸ்லி முகமட் சாலே தெரிவித்துள்ளார்.
சாலை பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பல சாலைகள் விரிசல், பள்ளங்கள், நிலச்சரிவுகள் போன்ற சேதங்கள் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களையும் ஊராட்சி மன்றங்களையும் பழுதுபார்க்க உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான மொத்தச் செலவாக 5 இலட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் ஆக கணிக்கப்பட்டுள்ளது.