ஜோகூர் பாரு, மார்ச்.23-
ஜோகூர் ஆட்சியாளர் பதவி வகிக்கும் துங்கு மாகோத்தா இஸ்மாயில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவ Southern Volunteers தன்னார்வலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய உதவுவது உட்பட உடனடி உதவி, பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க அவசியம் என்று துங்கு மாகோத்தா இஸ்மாயில் கூறினார். முன்னதாக, இன்று இங்குள்ள தாமான் தம்போய் இண்டாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் கண்டு நன்கொடை வழங்கினார். தாமான் தம்போய் இண்டா பள்ளிவாசலைச் சுத்தம் செய்த தன்னார்வ தொண்டர்களுடன் நேரத்தை செலவிட்டார்.
கடந்த புதன்கிழமை முதல் ஜோகூரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது 19 ஆண்டுகளுக்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு நேர்ந்த பெரும் வெள்ளத்திற்குப் பிறகு மிக மோசமானதாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களால் விவரிக்கப்பட்டது. இது பலரின் வீடுகள் கூரை வரை வெள்ளத்தில் மூழ்கடித்தது. மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் உயரமான குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டனர். உணவு உதவி கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.