செகாமாட், மார்ச்.23-
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவில் இருந்து வரவிருக்கும் ஈடிஎஸ் இரண்டு மின்சார ரயில் செட்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈடிஎஸ் மின்சார ரயில் சேவை நாட்டின் ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய சாதனை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 10 செட்களும் வரும் வரை காத்திருக்கவில்லை எனவும் தயாரான செட்களுடன் புதிய இரயில் சேவை தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.