1,512 எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன

கோல சிலாங்கூர், மார்ச்.23-

சனிக்கிழமை வரை நாடு முழுவதும் உள்ள இரமலான் சந்தை உணவு விற்பனையாளர்களுக்கு மொத்தம் 1,512 எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய வணிகர்கள் மீது மாநில சுகாதாரத் துறை ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார். உணவு கையாளும் பயிற்சியை மேற்கொள்ளாதது, tifoid தடுப்பூசி போடாதது, உணவைக் கையாளும் போது முறையற்ற ஆடை அணிவது ஆகியவை கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும். கடந்த மார்ச் 2 முதல் நேற்று வரை அனைத்து இரமலான் சந்தைப் பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் பிரிவு 32B இன் கீழ் அனைத்து அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என டாக்டர் சுல்கிப்ளி வலியுறுத்தினார். நச்சுணவு ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து உணவு கையாளுபவர்களும் இரமலான் சந்தை வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார். உரிமம் இல்லாமல் உணவைக் கையாளுவதும், tifoid தடுப்பூசி போடாததும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய கடுமையான குற்றங்கள் ஆகும். சுகாதார அமைச்சு அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் எப்போதும் இருப்பார்கள். மேலும் அனைத்து வணிகர்களும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிச் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS