கோலாலம்பூர், மார்ச்.24-
வரும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் அறிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் நாடு தழுவிய நிலையில் உள்ள கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தியப் பின்னர் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள முக்கியப் பதவிக்கு போட்டியிடத் தாம் முடிவு செய்துள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனது நோக்கம் குறித்து கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் தெரியப்படுத்தி விட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்துள்ளார்.