நஜீப் வீட்டுக் காவல் உத்தரவு, அப்பீல் மனு மீதான விசாரணை தொடங்கியது

புத்ராஜெயா, மார்ச்.24-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் அரசாணை உத்தரவு தொடர்பான மறு சீராய்வு மனுவை எதிர்த்து சட்டத்துறை தலைவர் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கியது.

காலை 9.30 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணையில் சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் முதல் முறையாக ஆஜராகியுள்ளார்.

முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, பிறப்பித்ததாகக் கூறப்படும் அரசாணை உத்தரவான நஜீப், தனது எஞ்சிய சிறை வாசத்தை வீட்டிலிருந்து அனுபவிக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவிற்கான வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கியிருக்கும் அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை தலைவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னாள் மாமன்னர் வழங்கிய இந்த உத்தரவை ஏற்று காஜாங் சிறையிலிருந்து கோலாலம்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு தன்னை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நஜீப் நடத்தி வரும் இந்த சட்டப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

WATCH OUR LATEST NEWS