இஸ்மாயில் சப்ரி, 6ஆவது நாளாக விசாரணையில் ஆஜர்

புத்ராஜெயா, மார்ச்.24-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், புத்ராஜெயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இன்று திங்கட்கிழமை ஆறாவது நாளாக ஆஜராயுள்ளார்.

ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் எஸ்பிஆர்எம்மின் விசாரணைப் பிடியில் ஒரு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஸ்மாயில் சப்ரியின் Toyota Vellfire வாகனம், காலை 9.54 மணிக்கு எஸ்பிஆர்எம் தலைமையகக் கட்டட வளாகத்திற்குள் நுழைந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வாகனம் சென்றது. வழக்கம் போலவே செய்தியாளர்களை நோக்கி கையசைத்தவாறு இஸ்மாயில் சப்ரி சென்றார்.

WATCH OUR LATEST NEWS