கல்வி அமைச்சின் விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்

புத்ராஜெயா, மார்ச்.24-

மலாய்மொழி தெரியவில்லை என்றால் இந்த நாட்டில் இருக்க வேண்டாம், சீனாவுக்குச் சென்று விடு என்று கூறி, ஒரு சீன மாணவனை அவமதித்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் தற்போது கல்வி அமைச்சின் விசாரணையில் இருந்து வருவதாக அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

மலாய்மொழியில் போதுமான திறன் இல்லாமல் தடுமாறிய அந்த மாணவனை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், அவமதித்தது தொடர்பில், கல்வி அமைச்சு அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே வேளையில் இது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதால், போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று பாஃட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைக்க வேண்டிய பள்ளியில் இனத் துவேஷமாக நடந்து கொள்ளும் இது போன்ற ஆசியர்களின் போக்கைக் கல்வி அமைச்சு ஒரு போதும் சகித்துக் கோளாறு என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் ஒரு பேரங்காடி மையத்தில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 320 மாணவர்களுக்கு உதவிப் பொருட்களுக்கான வவுச்சர்களை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிம் பேசுகையில் பாஃட்லீனா சீடேக் இதனைக் குறிப்பிட்டார்.

அந்த ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவனை நோக்கி இனத் துவேஷத்துடன் மிக ஆணவமாகப் பேசும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீ ஒரு முட்டாள். இங்கே அமராதே… அந்த குப்பைத் தொட்டிக்கு அருகில் உட்கார் என்று அந்த ஆசிரியர் ஆவேசமாகக் கத்தியதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS