ஜாசின், மார்ச்.24-
தனது மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக வீடு திரும்பிக் கொண்டு இருந்த மாது ஒருவர், காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று காலை 8.40 மணியளவில் மலாக்கா, ஜாலான் மலக்கா-மூவார்-மெர்லிமாவ் சாலையில் நிகழ்ந்தது.
42 வயது நோர் பாஃராடில்லா முகமட் யூசோப் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
34 வயது ஆசிரியர் ஒருவர் செலுத்திய கார், மாதுவின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாகக் கூறப்படுகிறது. கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.