அலோர் ஸ்டார், மார்ச்.24-
கடந்த ஆண்டில் கேபள் திருட்டுச் சம்பங்களினால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் வட பகுதி வழித்தடத்திற்கான ரயில் சேவைகள், மொத்தம் 162 மணி நேரம் பாதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இதனால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டிற்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு நடந்த கேபள் திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 414 விழுக்காடு ( 414) அதிகமாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.
கேபள் திருட்டுச் சம்பவங்கள் ரயில் சேவையில் முக்கியப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரி 12 சம்பவங்கள் நிகழ்வதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.