திரெங்கானு மாநில ஆட்சி ஆட்டம் கண்டுள்ளதா?

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.24-

திரெங்கானு மாநில ஆட்சி ஆட்டம் கண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவலை அம்மாநிலத்தின் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

திரெங்கானு மந்திரி பெசார் பதவி விலகக் கோரி , சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு போஸ்டர் , அரசியல் வட்டாரங்களில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர வேறு எந்தவொரு சர்சசையும் இல்லை என்று மாநில நிர்வாகம் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

இதனிடைய திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் பதவி விலகக் கோரி வெளியிடப்பட்டு வரும் போஸ்டர் குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS