400 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பரிமாற்றத்தை பேங்க் நெகாரா தடுத்தது

கோலாலம்பூர், மார்ச்.24-

கடந்த ஆண்டு ஸ்கேம் மோசடி வாயிலாக சம்பாதிக்கப்பட்டவை என்று நம்பப்படும் கிட்டத்தட்ட 400 மில்லியன் ரிங்கிட் பண பரிமாற்றத்தைத் தடுப்பதில் வங்கிகள் வெற்றிக் கண்டுள்ளதாக பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

போலீசில் செய்த புகார்களின் அடிப்படையில் தொடர்புத்துறை மோசடி வாயிலாக 31.6 விழுக்காடு பண பரிமாற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று 30.6 விழுக்காடு மின்வர்த்தகம், 15.4 விழுக்காடு கடன் 13.9 விழுக்காடு முதலீடு, 3.9 விழுக்காடு காதல் மற்றும் 4.7 விழுக்காடு தரவுகள் மோசடி தொடர்பில் பண பரிமாற்றம் செய்யப்படுவதை வங்கிகள் மிகச் சாதுர்யம் தடுத்துள்ளதாக பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS