கொலை மிரட்டல் விடுத்த நபர் , போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.24-

கோலாலம்பூர், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடம் மாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர், விசாரணைக்குப் பிறகு இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்தார்.

இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அந்த நபர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் இருப்பதாக ஏசிபி ஷாருல்நிஸாம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS