கோலாலம்பூர், மார்ச்.24-
மலாய்மொழியை விட ஆங்கில மொழி பயன்பாட்டிற்கு அதீத முக்கியத்துவம் அளித்து வரும் அரசுப் பணியாளர்களை நாட்டின் மலாய் மொழி காப்பகமான டேவான் பஹாசா டான் புஸ்தாகா இன்று கடிந்து கொண்டது.
அரசுத் திட்டங்கள், அவற்றின் வளாகங்கள், படிப்பு மற்றும் பிரச்சாரங்களுக்குப் பெயரிடும் போது அரசுப் பணியாளர்கள் மலாய்மொழியை விட ஆங்கில மொழி பயன்பாட்டிற்கு அதீத முன்னுரிமையை வழங்கி வருவதாக அந்த மொழிக் காப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசாங்க அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் ஆங்கிலமொழி பயன்பாடு மேலோங்கியிருப்பதாக அந்த மொழி காப்பகத்தின் தலைமை இயக்குநர் ஹஸாமி ஜஹாரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசுப் பணியாளர்கள் மேற்கொண்ட பிரச்சார முன்னெடுப்புகளில் Back to School Programmes மற்றும் KL Car – Free Morning போன்ற ஆங்கில மொழி சொல்லாடல்கள் அதிகமான பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.