ஈப்போ, மார்ச்.24-
ஆரோக்கியப் பானம் பாட்டிலில் போதைப் பொருளைக் கலந்து விநியோகித்து வந்ததாக நம்பப்படும் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈப்போ, தாமான் கன்னிங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 வயது கணவரும், 29 வயது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
ஆரோக்கியப் பானத்தை விற்பனை செய்து வந்ததாகப் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த அந்த தம்பதியர் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஈப்போவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டது மூலம் 11 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.