ஜோகூர் பாரு, மார்ச்.25-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று ஜோகூர்பாருவில் உள்ள சாலை ஒன்றின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கியோட்டிகளுக்கு இடையில் நிகழ்ந்த சண்டை தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
டிக் டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி தாக்கும் காட்சியைக் காண முடிந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.
இந்த கைகலப்பில் சம்பந்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.