26 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையலாம்

ஜார்ஜ்டவுன், மார்ச்.25-

வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 26 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனால் அபிடின் தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் அனைத்தும் கூட்டரசு நெடுஞ்சாலைகள் மற்றும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் வாயிலாக பினாங்கிற்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் வாகனங்களின் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு வரும் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை ஓப் செலாமாட் 24 நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று டத்தோ முகமட் அல்வி தெரிவித்தார்.

மேலும் ஹரிராயா பெருநாளுக்கு பினாங்கு போலீஸ் படையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு போலீஸ்காரர்கள் மட்டுமே விடுமுறையில் இருப்பர் என்று அவர் குறிபிட்டார்.

WATCH OUR LATEST NEWS