கேஎல்ஐஏ. விமான நிலையத்தில் சைபர் மிரட்டல்

சிப்பாங், மார்ச்.25-

சிப்பாங், கோலாலம்பூர், அனைத்துலக விமான நிலையத்தின் கணினி முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எந்தவொரு அச்சுற்றுத்தலும் ஊடுருவாமல் இருக்க விமான நிலைய கணினி முறைகளை தேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சியான நக்ஸா ( Nacsa ) அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கழமை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெட்ஹாட்டிடம் இருந்து கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து கேஎல்ஐஏவின் கணினி முறைகள் தற்போது அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதன் நிர்வாக அதிகாரி மெகாட் ஸுஹய்ரி தஜுடின் தெரிவித்தார்.

இந்த சைபர் மிரட்டினால் விமான நிலையத்தின் செயலாக்கம் பாதிக்கப்படவில்லை என்றாலும், அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கணினி முறைகள் விழிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS