சபா பெர்ணம், மார்ச்.25-
இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சபா பெர்ணம், ஜெட்டி ஆசோக் லோரோங் 11, செகின்சான், என்ற இடத்தில் ஒரு வீடும், இரண்டு படகுத்துறைகளும் 80 விழுக்காடு அழிந்தன.
இச்சம்பவம் காலை 8.50 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு 6 நிமிடத்தில் வந்தடைந்த செகின்சான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 17 வீரர்கள், தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் துரித வேகத்தில் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.