சிக், மார்ச்.25-
கெடா, சிக், ஜாலான் பெஃல்டா தெலோய் திமூர், கம்போங் மெர்பாவ் குடுங்கில் லோரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.16 மணியளவில் நிகழ்ந்ததாக சிக் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ஜாமில் மாட் டாவுட் தெரிவித்தார்.
20 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இருவரின் உடல்களையும் மீட்பதற்கு hydraulic cutter சாதனத்தை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.