கோலாலம்பூர், மார்ச்.25-
தனது 15 வயது மகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோப் படங்களைத் தனது கைப்பேசியில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக 56 வயது நபருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து இருக்கும் ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் 10 ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டால் 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க நடப்பு சட்டம் வகை செய்கிறது.
அந்த நபர் தனது குற்றத்தை ஒப்பிய பட்சத்தில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.