இரண்டு முக்கியப் பாலங்கள் சேதம்

ஜோகூர் பாரு, மார்ச்.25-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் இரண்டு பாலங்கள் கடுமையாகச் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலு திராம், கம்போங் தெனாங்கிற்கு செல்லும் பாலத்தின் தூண்கள் சேதமுற்ற வேளையில் முகிம் சுங்கை திராம், பத்து 20 இல் உள்ள ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

260 குடும்பங்களை சேர்ந்த 1,040 பேர் வசிக்கக்கூடிய பகுதியை இணைக்கும் பிரதான பாலங்களாக அவை விளங்கி வந்துள்ளன என்று கம்போங் உலு திராம் முகிம் பிலேதோங் கிராமத்துத் தலைவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS