6 குரங்குகள் மலேசியாவிற்கே திருப்பியனுப்பப்பட்டன

புதுடெல்லி, மார்ச்.25-

மலேசியாவில் இருந்து இந்தியாவிற்குப் பயணித்த இந்தியப் பிரஜை ஒருவர், தனது பயணப் பெட்டியில் 4 siamang gibbon குரங்குகள் மற்றும் இரண்டு குட்டி வால் குரங்குகளைக் கடத்தியதற்காக நேற்று திங்கள்கிழமை இந்தியாவின் பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெங்களூருவில் உள்ள Kempegowda அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தபோது, சென்னையில், மாத்தூரில் வசிக்கும் 24 வயது விநாயகமூர்த்தி கோட்டேஸ்வரன் என்பவரை அதிகாரிகள் கைது செய்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 6 குரங்குகளும் , இந்தியா, பெங்களுரு, விமான நிலையத்தில் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டன.

எனினும் அந்த வின விலங்குகள் அனைத்தும் பின்னர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

WATCH OUR LATEST NEWS