போர்ட்டிக்சன், மார்ச்.26-
காருடன் பிக்காப் லோரி ஒன்று எதிரும் புதிருமாக மோதியதில் 37 வயது லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் போர்ட்டிக்சன், ஜாலான் ஸ்பிரிங்ஹில் சாலையில் நிகழ்ந்தது.
லோரியின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக போர்ட்டிசக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் ஊடின் தெரிவித்தார்.
அந்த பிக்காப் லோரி ஓட்டுநர், லுகுட்டிலிருந்து ஸ்பிரிங்ஹில்லை நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்த்திசையில் 28 வயது நபர் செலுத்திய காரில், லோரி மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.