அந்தச் சம்பவம் விசாரணை செய்யப்பட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.26-

டாயாக் இனத்தைச் சேர்ந்த விற்பனைப் பணிப்பெண் ஒருவர், வாடிக்கையாளருடனான அலுவலின் போது, அந்தப் பெண்மணியை இனத்துவேஷத் தன்மையில் கடுமையாகத் திட்டியதுடன், கைவிலங்கிடப்படும் என்று ஆடவர் ஒருவர் மிரட்டியது தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், டாயாக் பெண்மணியை மிரட்டும் காட்சியைக் கொண்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அமைச்சர் ஆரோன் அகோ டகாங் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அண்மையில் ஷா ஆலாம், செண்ட்ரல் ஐ-சிட்டியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் டாயாக் பெண்ணை மிரட்டிய நபர், மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்டதுடன் நாம் நேசிக்கும் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கு முரணாக செயல்பட்டுள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியா போன்ற பல்லின மக்களைக் கொண்ட சர்வ சமய நாட்டில் இது போன்ற இழிவான இனத்துவேஷச் செயல்கள் நிகழ்வது அனுமதிக்கப்படக்கூடாது என்பதையும் அமைச்சர் ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS