19 வயது இளைஞர் மாடியிலிருந்து விழுந்து மரணம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.26-

19 வயது இளைஞர் ஒருவர், எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று காலை 10.34 மணியளவில் கோலாலம்பூர், கெப்போங், ஜாலான் விஸ்தா முத்தியாரா 1றில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ ஸாஹாரி தெரிவித்தார்.

உயிரிந்த இளைஞர், அந்த வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தனது தந்தைக்கு உதவியாக நீர்க் குழாய் பழுது பார்க்கும் பிளம்பர் வேலை செய்து வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விளைஞரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி அஹ்மாட் சுகார்னோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS