காஜாங், மார்ச்.26-
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா பெருநாளின் போது சிலாங்கூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 16 லட்சம் வாகனங்கள் நுழையும் மற்றும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ஓப்ஸ் லஞ்சார் நடவடிக்கையைப் போலீசார் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாகனங்கள் அதிகமாக போக்குவரத்து நெரிசலுக்கு இலக்காகும் பகுதிகளில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ ஹூசேன் தெரிவித்தார்.