அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானங்களை வாங்குவதில் தனிப்பட்ட நலன் உள்ளதா?

பாடாங் ரெஙாஸ், மார்ச்.26-

அமெரிக்காவிடமிருந்து மலேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், 30 போயிங் விமானங்களை வாங்குவதில் குறிப்பிட்ட நலன் சார்ந்து உள்ளது என்று கூறப்படுவதை நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் காமில் அப்துல் மூனிம் வன்மையாக மறுத்துள்ளார்.

எனினும் போயிங் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தமானது, நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மற்றும் நிபந்தனைகளின் அடிப்டையிலேயே அமெரிக்காவிடமிருந்து போயிங் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வதற்கு அமெரிக்காவிற்கான முன்னாள் மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் தவறியதைத் தொடர்ந்து போயிங் விமான கொள்முதல் வாயிலாக அமெரிக்க அதிபரைச் சந்திப்பதற்கு அன்வார் நோக்கம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதன் தொடர்பில் விளக்கம் அளிக்கையில் முகமட் காமில் மேற்கண்ட விளக்கத்தைத் தந்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS