கோலாலம்பூர், மார்ச்.26-
தனது இரண்டு பிள்ளைகளுக்கு அடையாள கார்டு எடுப்பதற்குப் போலி பிறப்பு சான்றிதழ் சமர்ப்பித்தது மற்றும் பொய்யான தகவலை வழங்கியது ஆகிய குற்றங்களுக்காக வேலையில்லாத நபருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதின்றம் இன்று 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
62 வயதுடைய நபருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவாரேயானால் 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் அமீரா அப்துல் அஸிஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த 2009 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் மற்றும் கெப்போங் தேசிய பதிவு இலாகாவில் உள்ள அலுவலகங்களில் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.