மீரி, மார்ச்.26-
மூத்த அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர், பூச்சோங்கைச் சேர்நத 21 வயதுடைய அந்த இராணுவ வீரர், சரவாக், மீரி இராணுவ முகாமில் பயிற்சியில் இருந்த போது இந்த சித்ரவதை சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி சரவாக் மாநில போலீஸ் ஆணையர் டத்தோ மன்சா ஆதா, உயிரிழந்த அந்த வீரரின் பற்றிய மேல் விபரங்களை வெளியிடவில்லை. அதே வேளையில் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்களா? என்பதையும் விவரிக்க மறுத்து விட்டார்.