சமூக ஆர்வலர் முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்தார்

புத்ராஜெயா, மார்ச்.26-

பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதியை NGO அமைப்பு ஒன்றின் சமூக ஆர்வலர் ஒருவர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள முக்கிய ஆவணங்களை அந்த சமூக ஆர்வலர் இன்று மலேசிய ஊழல் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கிய ஒரு தம்பதியர் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து நிதி வசூலித்து இருப்பதைப் போன்று இந்த சம்பவமும் நடந்திருக்கக்கூடும் என்று எஸ்பிஆர்எம் சந்தேகிக்கிறது.

எனவே எஸ்பிஆர்எம் கோரியுள்ள அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட NGO தலைவர், எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS