ஹரிராயாவை முன்னிட்டு டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி

ஆயர் கெரோ, மார்ச்.26

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படவிருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

வாகனமோட்டிகளுக்குச் சுமையை குறைக்கும் அதே வேளையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பின்னிரவு 12.01 மணிக்குத் தொடங்கி மறுநாள் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு மணி 11.50 மணி வரையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS