கோலாலம்பூர், மார்ச்.27-
வரும் ஹரிராயா பொருநாளை முன்னிட்டு நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளை நாள் ஒன்றுக்கு சராசரி 27 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.
பிளஸ் எனப்படும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை 21 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும். மேற்குக் கரையோர நெடுஞ்சாலையான WCE- யை ஒரு லட்சத்து 76 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் .
அதே வேளையில் கிழக்குக் கரையோர நெடுஞ்சாலையான LPT- 1 நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 56 ஆயிரம் வாகனங்களும், LPT-2 நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 70 ஆயரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லெம்பாகா லெபுராயா மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.