ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.27-

வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் கட்டாயமாக ஜாலுர் கெமிலாங் பேட்ஜைத் தங்கள் சீருடையில் அணிந்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்விக்கூட மாணவர்கள் ஜாலுர் கெமிலாங் பேட்ஜை தங்கள் சீருடையில் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும், உயர் கல்விக்கூடத்திற்கும் தேவையான ஜாலுர் கெமிலாங் பேட்ஜை கல்வி அமைச்சு விநியோகிக்கும்.

ஜாலுர் கெமிலாங் பேட்ஜை அணியும் இந்த பரிந்துரைக்கு அமைச்சரவை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இளம் வயதிலேயே மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கில் இம்முடிவு செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS