கோலாலம்பூர், மார்ச்.27-
சீன இயக்கம் ஒன்று தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டு சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுவதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் முழு வீச்சில் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஒரே சீன சமாதான ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படுவதாகக் கூறப்படும் அந்த இயக்கம் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் USJT பிரிவு, விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
மலேசியாவில் கம்யூனிஸ்டு சித்தாந்தத்தையும், அதன் நடைமுறைகளையம் அமல்படுத்துவதற்கு அந்த சீன இயக்கம் அதீத ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது
சம்பந்தப்பட்ட இயக்கத்திற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து 1966 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டான்ஶ்ரீ ரஸாருடின் மேலும் கூறினார்.