பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேரம் தண்ணீர் தடை ஏற்படும்

ஜார்ஜ்டவுன், மார்ச்.27-

வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பினாங்கு மாநிலம் முழுவதும் இரண்டரை நாள் அல்லது 60 மணி நேரம் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்ற பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

அட்டவணையிடப்பட்ட இந்த தண்ணீர் விநியோகத் தடையினால் பினாங்கு மாநிலத்தில் குடிநீர் விநியோகக் கணக்கு வைத்திருக்கும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்து 41 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில குடிநீர் விநியோக முறையின் தரத்தை உயர்த்துவதற்கு 23 வகையான பராமரிப்புப் பணிகளைப் பினாங்கு குடிநீர் விநியோக வாரியம் மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த வாரித்தின் பராமரிப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை 60 மணி நேரத்திற்கு அமல்படுத்தப்படவிருப்பதாக சோவ் கோன் யோவ் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS