எகிப்தில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி அறுவர் பலி

கெய்ரோ, மார்ச்.27-

வடக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தின் செங்கடலில் உள்ள ஹர்கடா கடற்கரையில் சிந்துபாத் என்னும் நீர்மூழ்கிக் கப்பல், 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. துறைமுகம் அருகே செல்லும் போது திடீரென அது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

அதில் 6 பேர் பலியானதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தை அடுத்து பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பட்டுள்ளன. விரிவான விசாரணை நடந்து வருகின்றன. எகிப்திய கடல் படை மற்றும் மீட்பு படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தொழில்நுட்ப பழுது அல்லது ஆக்சிஜன் கசிவு காரணமாக கப்பல் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அனைத்துலக நீர்மூழ்கி மீட்பு குழுக்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS