திருவனந்தபுரம், மார்ச்.27-
கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியரின் கார் மீது பட்டாசுகளை வீசிய சம்பவம் கேரளா, திருவனந்தபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வின் போது சில மாணவர்கள் காப்பியடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், அதற்கு அனுமதிக்கவில்லை. காப்பி அடிக்க முடியாத மாணவர்கள், தேர்வு முடிந்த பின், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
அந்த ஆசிரியர் தன் காரில் பள்ளியிலிருந்து புறப்பட்டார். அப்போது அந்த மாணவர்கள் அவரது கார் மீது சரமாரியாக பட்டாசுகளை பற்ற வைத்து வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. எனினும் ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை. போலீசார், மாணவர்களில் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.