ஷா ஆலாம், மார்ச்.27-
மலேசிய நெடுஞ்சாலைகளில் புதிய வரவாகப் பார்க்கப்படும் விரைவு சாலையான WCE எனப்படும் மேற்குக் கரையோர நெடுஞ்சாலையும், இம்முறை ஹரிராயா பெருநாளின் போது அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கிய நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் இந்த மேற்குக் கரையோர நெடுஞ்சாலையில் ஹரிராயாவையொட்டி இன்று வியாழக்கிழமை முதல், நாள் ஒன்றுக்கு சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று WCE விரைவு சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டோன் அல்பிஃரட் பேஃலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆபத்து அவசர வேளைகளில் உடனடி உதவிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.