கோலாலம்பூர், மார்ச்.27-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர்வையைப் பயன்படுத்தி தனது மனைவியை மூச்சடைக்கக் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக குத்தகையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
51 வயது சுவா சின் ஹோ என்ற அந்த குத்தகையாளர், தனது தற்காப்பு வாதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அந்த நபர், பிடிபட்ட தினமான 2021 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி முனியாண்டி உத்தரவிட்டார்.
கடந்த மே 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் 45 வயதுடைய லாவ் பீ ஹொங் என்ற தனது மனைவியைக் கொலை செய்ததாக அந்த குத்தகையாளர் குற்றவில் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.