வளர்ப்பு மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த தந்தைக்கு 6 மாதச் சிறை

மூவார், மார்ச்.27-

தனது 15 வயது வளர்ப்பு மகளின் நிர்வாணப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோ படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக இதற்கு முன்பு வெறும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டும விதிக்கப்பட்ட தந்தை ஒருவருக்கு, மூவார் உயர் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி, 56 வயது நபருக்கு 6 ஆயிரம் அபராதத் தொகையை விதித்த மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த நபருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, குற்றத்தன்மையின் கடுமைக்கு ஏற்ப இல்லை என்று பிராசிகியூஷன் தரப்பு தனது மேல்முறையீட்டில் வாதிட்டது.

பிராசிகியூஷன் தரப்பின் இந்த மேல்முறையீட்டை செவிமடுத்த உயர் நீதிமன்றம் நீதிபதி மியோர் ஹாஷிமி அப்துல் ஹாமிட், அந்நபருக்கு விதிக்கப்பட்ட 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதே வேளையில் அபாரதத்திற்குப் பதிலாக 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.

WATCH OUR LATEST NEWS