செத்தியூ, மார்ச்.27-
நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு திரெங்கானு, செத்தியூ ஷரியா நீதிமன்றம் 5 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
38 வயதுடைய அந்த மாது கடந்த திங்கட்கிழமை நீதிபதி மாட் ரோப்பி பூசு முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதாக திரெங்கானு மாநில ஷரியா தலைமை அதிகாரி ஐஸி சைடி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாது அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.