அம்பாங், மார்ச்.27-
அம்னோ வட்டாரத்தில் மிக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக விளங்கிய சிலாங்கூர், சுங்கை பெசார் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் ஜமால் யுனோஸ், உடல் நலிவடைந்து, மிக மோசமான நிலையில் அம்பாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சனிக்கிழமை அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜமால் யுனோஸ், மூளையில் பரவிய புற்றுநோயினால் உயிருக்குப் போராடி வருகிறார்.
நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய், 4 ஆம் கட்டத்தில் இருந்த வேளையில் தற்போது மூளை வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.