அம்பாங், மார்ச்.27-
ஆங்கில எழுத்தான G-யைத் தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக 6 வயது மாணவியின் காதைத் திருகிய குற்றத்திற்காகப் பாலர் பள்ளி முதல்வருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
61 வயதுடைய அந்த பாலர் பள்ளி முதல்வர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இன்று மார்ச் 27 ஆம் தேதி முதல் 20 நாள் சிறைத்தண்டனை விதிப்பதாக செஷன்ஸ் நீதிபதி நுருலிஸ்வான் அஹ்மாட் ஸூபிர் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அம்பாங், தாமான் செம்பாகாவில் உள்ள பாலர் பள்ளியில் அந்த பெண் முதல்வர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.